×

15 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 கடைக்கு சீல்

கள்ளக்குறிச்சி, டிச. 1: கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட எஸ்பி மோகன்ராஜ் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் அந்தந்த காவல்நிலையத்திற்கு உட்பட்ட போலீசார் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அதில் கள்ளக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தச்சூர் கிராமத்தில் வேலு மகன் சரவணன்(32), அண்ணா நகர் முருகேசன்(62), பகண்டைகூட்டுசாலை காவல் நிலை எல்லைக்கு உட்பட்ட லாலாபேட்டை கிராமத்தில் ராமதாஸ் மகன் சுரேஷ்(30), சங்கராபுரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட வடசிறுவள்ளூர் கிராமத்தில் மாரியாபிள்ளை மகன் அறிவழகன்(28), சங்கராபுரம் பகுதி சீனுவாசன் மகன் ஹரிஷ்(19), திருநாவலூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்பட்டு கிராமத்தில் வைரக்கண்ணு மகன் அய்யப்பன்(27), கெடிலத்தில் ராமன்(62), திருநாவலூர் பகுதியில் குப்புசாமி மகன் சுகுமார்(44), தியாகதுருகம் பகுதியில் சின்னா மகன் விக்ரம்(37), உளுந்தூர்பேட்டை பகுதியில் திருநாவலூரை சேர்ந்த காண்டீபன் மகன் வெங்கடேசன்(45), மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அத்தியந்தல் கிராமத்தில் ராஜாராம் மனைவி நதியா(36), சின்னசேலம் ஆறுமுகம்(70), கதிரவன்(60) ஆகியோர் அவர்களது கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்த போது கையும் களவுமாக பிடித்து கைது செய்து அந்தந்த காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 13 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் 9 பேரை அதிரடியாக கைது செய்தனர். இவர்களிடமிருந்து சுமார் 15 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இரண்டு கடைகளுக்கு வருவாய்துறையினர் சீல் வைத்தனர்.

The post 15 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி மாணவி மதி மரண...